தமிழிசை தந்தை ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார்( நவம்பர் 18 )
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் தெலுங்கிசை முழங்கிக் கொண்டிருந்தது. தமிழ் பாடல்களுக்கு இசை நிகழ்ச்சிகளில் இறுதி சில நிமிடங்களே ஒதுக்கப்பட்டது.இந்நிலை மாற தமிழ்ப்பாடல்கள் எங்கும் ஒலிக்க எழுந்த தன்மானத் தமிழரே வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் ஆவர். இருபதாம் நூற்றாண்டில் எழுந்த தமிழிசைப் புரட்சியின் பெரும் பங்கு இவரையே சாரும். தமிழிசை வளர்சிக்காக பெரும் பொருளுதவியும் , கல்லுரி மற்றும் மன்றங்களை அமைத்து தமிழிசை வளர்ச்சியை அனு அனுவாக உயர்த்தினார்.
கி.பி.1929 ஆண்டு சிதம்பரத்தில் இசைக்கல்லுரியை தொடங்கி பின் அதை 1932 ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைத்தார் . 16/11/1940 ல் நடைப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் 1500 ரூபாய் நன்கொடையாக தமிழிசை வளர்சிக்காக வழங்கியுள்ளார் . மேலும் அப்பட்டமளிப்பு விழாவிலேயே பல்கலைக்கழக மாணவர்களுள் சிறப்பாக தமிழிசை பாடல்களை பாடுவருக்கு ஆண்டுதோறும் அளிக்கக் கூடிய பரிசுத்திட்டம் ஒன்றிற்கு 1000 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள் .
தமிழிசை வளர்சிக்காக முதன்முதலாக அண்ணாமலைநகரில் 14/08/1941 முதல் 17/08/1941 வரை மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது .
மேலும் தமிழ் இசைபாடல்களைப் புதியனவாக இயற்றுபவர்களுக்கும் பிறர் இயற்றியுள்ள தமிழ் இசை பாடல்களை முறையாகப் பாடுவர்களையும் ஊக்கம் ஊட்டுவதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இரண்டு பெரும் போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கியது . இப்போட்டிகளில் பரிசு பெற்றவர்களில் தி.இலக்குமணபிள்ளை ,பாபநாசம் சிவன் ,கே.பொன்னையா பிள்ளை ,மாரியப்ப சுவாமிகள் ,கீழ்வேலூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தவர்கள். மேலும் இப்போட்டிகளில் பாடப்பெற்ற பாடல்களில் சிறந்த 46 பாடல்கள் ,இசையமைப்போடு பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டன.
மேலும் அண்ணாமலை அரசரின் 60 ஆண்டு நிறைவு விழாவில் தமிழிசை வளர்சிக்காக 15000 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள் .இந்நிதியை செலவிடுவதற்கு சில திட்டங்கள் வகுக்கப்பட்டன .
- தமிழிசை கழகங்களுக்கு பொருளுதவி செய்தல் .
- தமிழ் பாடல்களே பெரும்பாலும் பாடப்பெறும் இசையரங்குகளை அமைத்தல்.
- புதிய தமிழ்ப்பாடல்கள் இயற்றுதல்.
- அறிய பழைய தமிழ்ப்பாடல்களை கற்ப்பிக்கும் இசைக்கலைர்க்குநன்கொடை அளித்தல்.
- அறிய தமிழிசை பாடல்களை திரட்டுதல் .
- தமிழிசைப்பாடல்கள் நூல்கள் வெளியிடுதல் .
வானொலியில் தமிழிசை பாடல்களை பாடுவதன் மூலம் தமிழிசை வளர்ச்சி துரிதமடையும் என அண்ணாமலை அரசர் எண்ணினார் .எனவே திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெறும் இசை சம்பந்தமான நிகழ்சிகளில் தமிழுக்கு 80 சதவிகிதமும் மற்ற மொழிகளுக்கு 20 சதவிகிதமும் அதுபோல் சென்னை நிலையத்தில் தமிழுக்கு 60 சதவிகிதமும் மற்ற மொழிகளுக்கு 40 சதவிகிதமும் வாய்ப்புகள் வழங்க வேண்டுமாறு வானொலி நிலைய இயக்குனருக்கு கடிதம் எழுதினார்கள்.
மேலும் அண்ணாமலை அரசரின் நிதி உதவியோடு திருச்சி,மதுரை,புதுக்கோட்டை ,ஆத்தங்குடி ,கும்பகோணம் ,திருப்பத்தூர் ,திண்டுக்கல் ,வலம்புரி ஆகிய ஊர்களில் தமிழிசை விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன .
தமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாக சென்னை மாநகரில் தமிழ் இசை சங்கத்தை 1943 ஆண்டு நிறுவினார் . இச்சங்கம் தமிழிசை இயக்க செயல்பாடுகளுக்கு தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது .
இத்தகைய தமிழிசை வளர்சிக்காக பெரும் பங்காற்றிய தமிழிசை தந்தை வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் பிறந்தநாள் இம்மாதம் செப்டம்பர் 18 ஆகும் . எனவே அன்றைய நாளில் அவரை நினைத்து அவரது பெருமைகளை பேசுதல் தமிழ் மக்களாகிய நமது கடமையாகும் .