Wednesday, 26 October 2011

எப்படிப் பாடவேண்டும் ?எம்.எம்.தண்டபாணி தேசிகர்

திரு, தண்டபாணி தேசிகர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களையும் தேவார திருமுறைகளையும் பாடி தமிழிசை வளர்த்த இசையரசராவார் .அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசை இயக்கத்திற்கு தமது பாடல்கள் மூலம் ஏற்றம் தந்தவர்.

இவர் இனிமை ததும்பும் பல தமிழ் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார்.தமது பாடல்களில் தமிழிசைப் பற்றியும் , இசை இலக்கனங்களையும்,சமூக பொதுக் கருத்துகளையும் பாடி உள்ளார்.                            

எப்படி பாட வேண்டும்?

தேசிகர் அவர்கள் " பாட வேண்டுமே" என்ற தமது பாடலில் பாடும் முறைமையை எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். இந்த பாடலை இனிமையான அம்சநாத ராகத்தில் அனைவரும் ரசிக்கும்படி  இசையமைத்துள்ளார். அப்பாடல் வருமாறு,

ராகம்: அம்சனாதம் 
தாளம்: ரூபகம் 

                                                    பல்லவி 

                                  பாட வேண்டுமே இசை 
                                  பாட வேண்டுமே இசைப் 
                                  பாவின் பொருளை நன்குணர்ந்து 

                                            அனுப்பல்லவி 

                            ஆடுங் கூத்தன் அடியை நினைந்து 
                            அன்பினால் அகம் கனிந்து கனிந்து 
                                                                                            (பாட வேண்டுமே )

                                                   சரணம் 

                           குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி 
                           குரலையதனுள் நன்றாய் ஏற்றி 

                          முழவின் துணையால் தாளங்காட்டி 
                           மூன்று தமிழின் முறையை நாட்டி 
                                                                                        (பாட வேண்டுமே 
பாடலின் விளக்கம் ,
பாடும் பாடலின் பொருளை நன்கு உணர்ந்து பாட வேண்டும் .மனதில் எப்பொழுதும் பக்தியுடனும் அன்புடனும் பாட வேண்டும். 
பாடும்பொழுது சுருதியில் விலகாமல் தாளத்துடன் பாடல் வரிகளை இயல்,இசை,பாவம்,மூன்றும் விளங்குமாறு பாடவேண்டும் .என அழகாக எடுத்துரைக்கிறார்.
இந்தப் பாடலை தண்டபாணி தேசிகர் அவர்களின் தெளிந்த தேன் குரலில் கேட்க, சுட்டி 

6 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

jeevagv said...

இனிய இசைத்தொண்டு தொடரட்டும்.
கனிவான வாழ்த்துக்கள் பலப்பல.

sury siva said...

ஜீவா வலை வழியே இஙு வந்தேன்.

இரங்காத உள்ளங்களையும்
இசை ஈர்க்கும்
ஈசன் அடி சேர்க்கும்
உங்கள் பணி சிறக்க‌
ஊக்கமுடன செயல்படுங்கள்.

வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) said...

நன்றி ஜீவா சார் . உங்களோட வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) said...

sury ---வணக்கம் அய்யா உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள். உங்கள் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி .

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் ,உங்களது பதிவுஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நண்பரே நேரம் இருக்கும்போது பார்த்துச் செல்லவும் .நன்றி
http://blogintamil.blogspot.in

Post a Comment